Categories: Cinema News latest news

பிரபல ஆங்கரை பிச்சைகாரனை போல் நடத்திய சிவகார்த்திகேயன்…! கோபத்தின் உச்சியில் தொகுப்பாளர்…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் முன்னனி நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் மெரினா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்தப் படத்திற்கு பிறகு 3 என்ற படத்தில் துணை நடிகராக தனுஷ்க்கு நண்பனாக நடித்திருப்பார். தொடர்ந்து தனது நகைச்சுவை கலந்த படங்கள் மூலம் மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் ஒரு நேர்காணலில் தொகுப்பாளர் ரம்யா சிவகார்த்திகேயனை பேட்டி எடுத்தார். அப்போது சிவகார்த்திகேயனிடம் நீங்கள் ஒரு 5 பேருடன் டின்னர் சாப்பிட வேண்டும் என்றால் யாரை சொல்வீர்கள் என கேட்டார். பதில் அளித்த சிவகார்த்திகேயன் 4 பேரை வரிசையாக சொல்லிவிட்டு 5வது நபரை மிகவும் யோசித்து வேண்டும் என்றால் அது நீங்கள் தான் எனக் கூறினார்.

அதை கேட்ட ரம்யா டென்ஷனாகி விட்டார். 5வது நபரை ஏதோ ஒரு பிச்சைகாரனுக்கு டின்னர் கொடுப்பதற்கு பதிலாக என்னை சொல்லிவிட்டீர்களா? அதுவும் நீண்ட யோசனைக்கு பிறகு போனால் போது அது நீதான் என்பது மாறி சொல்லியிருக்கிறீர்கள் என கோபமாக பேசிவிட்டார். அதை சமாளிக்கு விதமாக சிவகார்த்திகேயன் உடனே சொன்னால் நான் செட்டில் ஆகிவிட்டேன். நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. இதனால் எதாவது பிரச்சினை வந்தால் என்ன பண்ணுவது என சமாளித்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini