எலான் மஸ்க் என் கணக்கை முடக்கினால் அதுவே என் முதல் வெற்றி... SK. அப்படி என்ன சொல்லிட்டாரு?

 
எலான் மஸ்க் என் கணக்கை முடக்கினால் அதுவே என் முதல் வெற்றி... SK. அப்படி என்ன சொல்லிட்டாரு?
சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்ப்பார்கள். அவரிடம் ஒரு குழந்தைத்தனமான மேனரிசம் இருக்கும். இதே போல தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய பெரிய நடிகர்களையும் சொல்லலாம். இதுபோன்ற நடிகர்கள் மக்கள் மனதில் சீக்கிரமாக 'ரீச்' ஆகிவிடுவார்கள். Also read: கங்குவா படத்த செஞ்சாச்சு.. இந்தியன் 2 வையும் ஒழிச்சாச்சு.. இனி அந்தப் படம்தான்? வேதனையில் தனஞ்செயன் அந்தவகையில் இப்போது விஜயின் இடத்தையும் சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்றும் சினிமா வட்டாரங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது அமரன் படம் கொடுத்த சூப்பர்ஹிட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தளவுக்கு படத்திற்கு அர்ப்பணிப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். எலான் மஸ்க் என் கணக்கை முடக்கினால் அதுவே என் முதல் வெற்றி... SK. அப்படி என்ன சொல்லிட்டாரு? Amaran இது கமல் படம் என்பதாலும் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் என்பதாலும் நாட்டுப்பற்று மிக்க படமாக உருவானதாலும் படம் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. படத்திற்கான மாஸ் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. அந்தவகையில் அவருக்கு அடுத்த படம் இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படம் அமரன் படத்தைப் போல இருமடங்கு செலவில் தயாராகி வருகிறதாம். டிவியில் ஆங்கராகி இந்தளவுக்கு அவர் சினிமாவிலும் உயர்ந்து இருப்பது பெரிய அளவில் வரவேற்கத்தக்க விஷயம் தான். அந்தவகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் இப்போ உள்ள 2கே கிட்ஸ்களைக் கருத்தில் கொண்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வளவு துணிச்சலாக யாரும் கருத்தை வெளியிட முடியாது என்றே சொல்லலாம். என்னன்னு பாருங்க. Also read: ராம் சரண் படத்தை ஆட்டைய போடும் அட்லி!.. திருந்தவே மாட்டார் போல!.. அதிக நேரம் சமூகவலைதளத்தைப் பயன்படுத்தாதீர்கள். குறிப்பாக எக்ஸ் தளத்தை. இது என் அன்பான ஆலோசனை. இதனால் எலான் மஸ்க் என் கணக்கை முடக்கலாம். அப்படி நடந்தால் அதுவே என் முதல் வெற்றியாக இருக்கும். எக்ஸில் இருந்து வெளியே வந்தால் எந்த பாரமும் இல்லாத சுதந்திரமான மனநிலையை உணர்வீர்கள் என்கிறார் சிவகார்த்திகேயன். இன்று எக்ஸ் தளத்தை 2கே கிட்ஸ்கள் தான் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 40வயதைக் கடந்தவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாவில் உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

From Around the web