Connect with us
Sivakarthikeyan, Vijay sethupathi

Cinema News

15 முறை சிவகார்த்திகேயனுடன் மோதிய விஜய்சேதுபதி படங்கள்!… வின்னர் யாருன்னு பார்க்கலாமா?…

சிவகார்த்திகேயனும், விஜய்சேதுபதியும் தமிழ்சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்கள். சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 10 வருடங்களிலேயே முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்து விட்டனர். இவர்களின் படங்கள் மோதினால் எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்.

2013ல் சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல், விஜய்சேதுபதிக்கு சூதுகவ்வும் படங்கள் ரிலீஸ். இதுல ரெண்டுமே வெற்றி தான். அதே ஆண்டில் சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், விஜய்சேதுபதிக்கு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களும் ரிலீஸ். இதுல ரெண்டுமே வெற்றி. என்றாலும் சிவகார்த்திகேயன் தான் வின்னர்.

2014ல் சிவகார்த்திகேயனுக்கு மான் கராத்தே, விஜய் சேதுபதிக்கு பண்ணையாரும் பத்மினியும் படமும் ரிலீஸ். இதுல சிவகார்த்திகேயன் தான் வின்னர். 2015ல் சிவகார்த்திகேயனுக்கு காக்கி சட்டை படமும், விஜய் சேதுபதிக்கு பென்ச் டால்க்கீஸ் படமும் ரிலீஸ். இது 6 குறும்படங்களை ஒன்றாகச் சேர்த்து எடுத்தது. இதுல சிவகார்த்திகேயன் தான் வின்னர்.

2016ல் சிவகார்த்திகேயனுக்கு ரஜினி முருகன், விஜய்சேதுபதிக்கு சேதுபதி ரிலீஸ். இதுல ரெண்டுமே வெற்றி. என்றாலும் சிவகார்த்திகேயன் தான் வின்னர்.

Remo

Remo

அதே ஆண்டில் சிவகார்த்திகேயனுக்கு ரெமோ படமும், விஜய்சேதுபதிக்கு றெக்க, ஆண்டவன் கட்டளை என்ற இருபடங்களும் ரிலீஸ். இதுல சிவகார்த்திகேயன் தான் வின்னர். 2017ல் சிவகார்த்திகேயனுக்கு வேலைக்காரன் படமும், விஜய்சேதுபதிக்கு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படமும் ரிலீஸ். இதுல சிவகார்த்திகேயன் தான் வின்னர்.

2018ல் சிவகார்த்திகேயனுக்கு சீமராஜா, விஜய்சேதுபதிக்கு செக்கச்சிவந்த வானம், இமைக்கா நொடிகள், 96 படங்கள் ரிலீஸ். இதுல விஜய் சேதுபதியின் 3 படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட். அதனால் அவர் தான் வின்னர்.

2018ல் சிவகார்த்திகேயனுக்கு கனா படமும், விஜய்சேதுபதிக்கு சீதக்காதி ரிலீஸ். இதுல சிவகார்த்திகேயன் தான் வின்னர். 2019ல் சிவகார்த்திகேயனுக்கு மிஸ்டர் லோக்கல், விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் ரிலீஸ். இதுல விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் தான் வெற்றி.

Super deluxe

Super deluxe

2019ல் விஜய்சேதுபதிக்கு சங்கத் தமிழன், சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ படமும் ரிலீஸ். இதுல சிவகார்த்திகேயன் தான் வின்னர். 2021ல் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படமும், விஜய் சேதுபதிக்கு அனபெல் சேதுபதி படமும் ரிலீஸ். இதுல சிவகார்த்திகேயன் தான் வின்னர். பாக்ஸ் ஆபீஸில் 100 கோடியை அள்ளியது டாக்டர்.

2022ல் சிவகார்த்திகேயனுக்கு டான் படமும், விஜய் சேதுபதிக்கு காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் ரிலீஸ். இதுல ரெண்டு பேருக்கும் வெற்றி. அதே ஆண்டில் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படமும், விஜய்சேதுபதிக்கு டிஎஸ்பி படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே சுமார் ரகம் தான்.

2023ல் சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் படமும், விஜய் சேதுபதிக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் படமும் ரிலீஸ். இதுல சிவகார்த்திகேயன் தான் வின்னர்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top