சுதா கொங்கரா செஞ்ச வேலை.. எப்படி அலையுறாரு பாருங்க நம்ம அமரன்

by Rohini |   ( Updated:2024-12-12 09:02:43  )
sivakarthikeyan
X

sivakarthikeyan

சிவகார்த்திகேயன்:

தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அதுவும் அமரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெருமையை பெற்று கொடுத்திருக்கிறது. அந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மீது ஒட்டு மொத்த தமிழக மக்களுமே அலாதி அன்பை வைக்க ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே நம்ம வீட்டு செல்ல பிள்ளையாகவே அவரை அழைத்து வந்த ரசிகர்கள் இப்போது சிவகார்த்திகேயனை தலையில் வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

அந்த அளவுக்கு அமரன் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் இப்போது மிகவும் பிஸியான நடிகராக மாறி இருக்கிறார். ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் சுதா கொங்கரா உடன் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார். இதில் சுதா கொங்கரா மற்றும் சிபி சக்கரவர்த்தி இவர்களுடன் இணையும் இந்த இரண்டு படங்களுமே ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தப் போவதாக முடிவு எடுத்திருந்தார்கள். ஆனால் சிபி சக்கரவர்த்தியுடன் இணையும் அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா கமிட் ஆகி இருக்கிறார்.

ராஷ்மிகா கால்ஷீட்டில் இழுபறி:

ஆனால் ராஸ்மிகா தெலுங்கில் மிகவும் பிசியாக இருப்பதனால் மார்ச் மாதத்திற்கு பிறகு தான் அந்த படத்தில் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியும் எனக் கூறியதனால் சிபிச் சக்கரவர்த்தியுடனான அந்த படம் மார்ச் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் இப்போது சுதா கொங்கரா படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

அந்த படத்தை தொடங்குவதற்கு முன்பு முதல் வேலையாக இன்று திருத்தணியில் உள்ள முருகனை தரிசனம் செய்ய அங்கு சென்று இருக்கிறார். அது சம்பந்தமான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. ஆனால் கோவிலுக்குள் சிவகார்த்திகேயன் மாஸ்க் அணிந்தபடி முழுவதுமாக வலம் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் போட்டோ எடுக்க ஆரம்பித்தனர்.

மாஸ்க்கை கழட்ட சொல்லி ரசிகை :

அதில் ஒரு குடும்பம் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து போட்டோ எடுக்க அதிலிருந்த ஒரு பெண் முதல் தடவை உங்களை பார்க்கிறோம். மாஸ்கை கழட்டலாமே எனக் கூற அதற்கு சிவகார்த்திகேயன் படத்திற்காக கெட்டப் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் மாஸ்க் போட்டு இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார். ஏனெனில் சுதா கொங்கரா உடன் இணையும் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் பிரென்ச் தாடி வைத்து நடிக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.




அதனால் அந்த தாடி தெரிய கூடாது என்பதற்காக கோயிலுக்குள் மாஸ்க் அணிந்தபடியே சாமி தரிசனம் செய்தார் சிவகார்த்திகேயன். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. இதற்கு முன் மதுரையில் உள்ள கோயிலுக்கும் தன் மனைவியுடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்திருந்தார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DDeEu5pJcwS/?igsh=MTczN2ZrODlxYWN4MA==

Next Story