இன்று நடந்த சிவகார்த்திகேயனின் அடுத்த படபூஜை … விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. அந்த கேள்விக்கான விடை இன்று கிடைத்துள்ளது. முன்னதாக இவர் நடிப்பில் வெளிவந்த மதராஸி, பராசக்தி ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் சேயோனை அடுத்து அவர் நடிக்க உள்ள SK27 படத்தின் பூஜை விழா இன்று நடந்தது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்க்கிங் படம் மூலம் ஆனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் கதைக்களம் கல்லூரி பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. SK27 படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே, சிவகார்த்திகேயன் மற்றும் ராம்குமார் கூட்டணி மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
