×

கொரோனாவிற்காக வாய்ஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்..

கொரோனா விழிப்புணர்வு குறித்து சிவகார்த்திகேயன் பேசும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

 
Sivakarthikeyan-from-Jaago-1

கொரோனா விழிப்புணர்வு குறித்து சிவகார்த்திகேயன் பேசும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

விழிப்புணர்வு வீடியோவில் சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது, கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி நமக்கெல்லாம் அச்சுறுத்தலா இருக்கிறது மட்டுமில்லாமல் நிறைய உயிர் சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதை தடுப்பதற்காக நம் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் நிறைய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு நிறைய விதிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள். அதில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ளத் தான் இந்த வீடியோ என்றார்.

அதில் மிக முக்கியமானது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது. நான் என்னுடைய ஃபர்ஸ்ட் டோஸை போட்டுட்டேன். வீட்டை விட்டு மிக மிக அவசியம்னா மட்டும் தான் வெளியே வரணும். அப்படி வெளியே வரும்போது சமூக இடைவெளியை சரியாக பின்பற்ற வேண்டும். 

நம் கைகளை எப்பொழுதும் சுத்தமாக வச்சுக்கணும். அதை எல்லாம் விட மிக முக்கியமானது, வெளியே போகும்போது எப்பொழுதுமே மாஸ்க் போட்டிருக்கணும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

இது எல்லாமே உங்களுக்கு தெரிந்தது தான். இதை எல்லாத்தையும் கடைபிடிப்பது நம்முடைய கடமை. ஆனால் அது மட்டுமில்லாமல் கொரோனா பற்றிய எந்த பயமும் இல்லாமல் தன் உயிரையும், குடும்பத்தையும் மறந்து நம்ம எல்லோருக்காகவும் இந்த கொரோனாவை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கும் முன்களப் பணியாளர்கள், அவர்களுக்கு நாம் செய்ற மரியாதையும் அதுவாகத் தான் இருக்கும். 

நாம் எல்லோரும் நினைத்தால் நிச்சயமாக இதில் இருந்து மீண்டு வர முடியும். ஒன்றிணைவோம், கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம். கொரோனாவை வெல்வோம், மக்களை காப்போம் என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News