#image_title
நடிகர் அஜித் திரைப்படத்துடன், நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படம் மோத இருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கின்றது.
நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். ஒன்று மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி.
விடாமுயற்சி திரைப்படம்: துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் முடிந்த பாடில்லை. ஒரே நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதையும் படிங்க: Dhanoosh: தனுஷோட பெரிய மெடிசனே இதுதான்?!… இதுக்காகத்தான் மகனின் திருமணம்… மனம் திறந்த நெப்போலியன்!..
இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் எடுக்கப்பட்டு வருவதால் அங்கு கால சூழ்நிலை மாற்றம் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாக கூறப்படுகின்றது. ஏறத்தாழ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும், ஒரு பாடல் காட்சிகள் மட்டும் எடுக்கப்பட வேண்டி இருக்கின்றது என கூறப்படுகின்றது.
குட் பேட் அக்லி திரைப்படம்: விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகின்றார். விடாமுயற்சி திரைப்படத்தின் படத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டது.
டிசம்பர் மாதம் இறுதிக்குள் இப்படம் முடிந்துவிடும் என்று கூறப்படுகின்றது. விடாமுயற்சி போல் இல்லாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பை வெகுவிரைவில் முடித்து விட்டார் ஆதிக் ரவிச்சந்திரன். மேலும் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ரிலீஸ் தேதி: விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் இன்னும் முடிவடையவில்லை. இருப்பினும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் குட் பேட் அக்லி திரைப்படம் முதலில் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மே 1ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்வதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.
அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்: அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏறத்தாழ மே 1-ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கின்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி வரும் எஸ்கே 23 திரைப்படம் அதே மே ஒன்றாம் தேதி வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒருபுறம் தகவல் வெளியாகி இருக்கின்றது.
பொதுவாக அஜித் திரைப்படம் வெளியானால் அதற்கு போட்டியாக எந்த திரைப்படமும் வெளியாகாது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் எந்த நம்பிக்கையும் அஜித்துடன் மோத இருக்கின்றார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இந்த தகவல் வெளியானது முதலே நடிகர் விஜய் துப்பாக்கியை கையில் கொடுத்தவுடன் தான் தான் விஜய் என்று சிவகார்த்திகேயன் நினைத்துக் கொண்டார் போல என்று கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: Kamal: கமல் திடீர்னு ஏன் பட்டத்த துறந்தார்னு இப்பதான் தெரியுது.. புதுசா ஒன்னு வருதுல!
அது மட்டுமில்லாமல் தற்போது எல்லாம் இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது சகஜம் தான். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு அஜித் படத்துடன் சிவகார்த்திகேயன் திரைப்படம் வெளியானால் கட்டாயம் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் ஏதாவது ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு தான் பரிந்துரைப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…