Categories: Cinema News latest news throwback stories

சிவகார்த்திகேயன் வளர்ச்சியை கெடுத்த சினிமா குடும்பம்… கண்ணீர் விட்டு அழுத எஸ்.கே!..இதெல்லாம் நடந்துச்சா?

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு வாரிசாக பிறந்தவர்கள் மிகவும் எளிதாக சினிமாவிற்குள் வந்து விட முடியும். ஆனால் வெளியில் இருந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் ஒரு சாதாரண ஆட்கள் பெரும் உச்சத்தை அடைவது மிகவும் கடினமான ஒரு விஷயம்.

உதாரணமாக கூற வேண்டும் என்றால் கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு, அதர்வா போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிக எளிதாக வாய்ப்புகள் பெற்று வந்துவிட்டனர் ஆனால் விஜய் சேதுபதி, விமல், சூரி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கும், வளர்ந்து வருவதற்கும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் சினிமாவிற்குள் வந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்தவர் தனுஷ். தனுஷின் உதவியாள்தான் சிவகார்த்திகேயன் சினிமாவிற்குள் அறிமுகமானார். அப்பொழுது இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் இடையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட சின்ன பிரச்சனையால் இருவரும் பிரிந்து விட்டனர்.

அந்த சண்டைக்கு முன்பு வரை சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக தனுஷ் இருந்ததால் அவரை யாரும் எதுவும் செய்யாமல் இருந்தனர். ஆனால் அந்த சண்டைக்குப் பிறகு அவருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டன என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

எஸ்.கே சந்தித்த பிரச்சனைகள்:

இது குறித்து அவர் கூறும் போது சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்குமான சண்டைக்கு பிறகு ஒரு பிரபல சினிமா குடும்பம் சிவகார்த்திகேயனை ஏமாற்ற ஒரு திட்டமிட்டது. வரிசையாக நான்கு படங்களுக்கான அட்வான்ஸ் தொகையை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்து அவரிடம் அதற்கான கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதன் பிறகு அந்த படங்களுக்கான படப்பிடிப்பை துவங்காமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் சிவகார்த்திகேயனுக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போயுள்ளன. எனவே சிவகார்த்திகேயன் பட வேலையை துவங்குங்கள், இல்லையென்றால் அட்வான்ஸை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என அவர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் அட்வான்ஸையும் வாங்க மறுத்து சிவகார்த்திகேயனையும் ஏமாற்றி வந்துள்ளனர். அதன் பிறகு பெரும்பாடுபட்டு அதிலிருந்து மீண்டு வந்த சிவக்கார்த்திகேயன் பிறகு ரெமோ படத்தில் நடித்தார். ரெமோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேசும்போது இந்த விஷயத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட காரணத்தால் கண்ணீர் விட்டு அழுது கொண்டு பேசினார் என செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: படத்தை ஓட வைக்க இதுதான் வழி.. ராஜ்கிரண் செய்த ட்ரிக்- இது புதுசா இருக்கே!

Rajkumar
Published by
Rajkumar