×

சிவகார்த்திகேயனின் வாழ் "ஆஹா" பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

வாழ் படத்தின்  "ஆஹா" பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

 

தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே உச்சத்தைத் தொட்டுள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்துள்ள எந்த படங்களும் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெறவில்லை என்றாலும் வசூலில் வெற்றி மழை பொழிகின்றன.

காரணம், அவரது நகைச்சுவையான பேசும்,  நடிப்பும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து நிறைய பேமிலி ஆடியன்ஸ் அவருக்கென உருவாகிவிட்டனர். இதனால் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அவர் உள்ளார். நடிப்பு மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே புரொடுக்ஷன் சார்பில் "'வாழ்" என்ற படம் உருவாகி வருகிறது அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கும் இப்படத்தின் 'ஆஹா' என்ற முதல் சிங்கள் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டனர். இதோ அந்த லிங்க் ...

From around the web

Trending Videos

Tamilnadu News