எனக்கு அதே மாதிரி படம்தான் வேணும்.. சிவகார்த்திகேயன் கேட்டு கிடைச்சது என்ன தெரியுமா?

by Rohini |
sivakarthikeyan
X

தமிழ் சினிமாவில் மெரினா திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த படத்தை இயக்கியவர் பாண்டிராஜ். முதல் படமே சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து விமல் ,சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த படத்தை இயக்கியவரும் பாண்டிராஜ் தான். மூன்றாவது முறையாக பாண்டிராஜுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.

அந்த படம் பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆனது. படத்தில் அமைந்த பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படம் எப்படி உருவானது என்பதை பற்றி பாண்டிராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கார்த்தி, சத்யராஜ் ,சாய்ஷா ஆகியோர் நடிப்பில் ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையை அடிப்படையாகக் கொண்டு பாண்டிராஜ் எடுத்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். கார்த்தி கேரியரில் இந்த படம் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், ஐந்து அக்கா ஒரு தம்பி இவர்களுக்கு இடையேயான பாசப் போராட்டம், ஒரு கணவனுக்கு இரண்டு மனைவிகள், அதனால் வரும் பிரச்சனை என வாழ்வியல் எதார்த்தத்தை இந்த படத்தின் மூலம் அழகாக காட்டி இருப்பார் பாண்டிராஜ்.


ஆனால் இந்த படத்தில் முதலில் சத்யராஜ் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. அந்த நேரத்தில் பாகுபலி 2 படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். அதனால் கட்டப்பா மாதிரி இந்த படத்தில் தனக்கு தீனி போடுகிற மாதிரி கேரக்டர் இல்லை என நினைத்து சத்யராஜ் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் பாண்டிராஜை பொறுத்த வரைக்கும் இந்த அப்பா கேரக்டருக்கு சத்யராஜ் அல்லது ராஜ்கிரண் இருவரில் யாராவது ஒருவர் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறார். ஆனால் படப்பிடிப்பு நாள் நெருங்க நெருங்க தயாரிப்பு தரப்பிலும் வேறு வேறு நடிகர்களை எல்லாம் பேசி பார்த்திருக்கிறார்கள்.

இயக்குனருக்கு அதில் எந்த ஒரு உடன்பாடும் இல்லையாம். அதனால் ஒரு கட்டத்தில் இந்த படமே வேண்டாம் என நினைத்து தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு வாய்ஸ் நோட் அனுப்பி விட்டு அவரது போனை ஆஃப் செய்து விட்டாராம். இது சிவகுமார் காதுக்கு செல்ல உடனே சிவக்குமார் சத்யராஞை தொலைபேசியில் அழைத்து நீ இந்த படத்தில் எனக்காக நடிக்கணும். அவ்வளவுதான் என சொல்லி இருக்கிறார். சத்யராஜை நடிகராக அறிமுகப்படுத்தியதே சிவக்குமார் தான்.

இதுவரை சிவக்குமார் இந்த மாதிரி சத்யராஜிடம் சொன்னதே இல்லையாம். சரி சிவகுமாரே சொல்லிவிட்டாரே என அதன் பிறகு தான் சத்யராஜ் இந்த படத்திற்குள் வந்திருக்கிறார். அப்படித்தான் கடை குட்டி சிங்கம் திரைப்படம் உருவானது. இந்த படம் எந்த அளவு வெற்றி பெற்றது என அனைவருக்குமே தெரியும். இந்த படம் சிவகார்த்திகேயனையும் பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது .


அதன் பிறகு பாண்டிராஜிடம் கடைக்குட்டி சிங்கம் மாதிரி எனக்கு ஒரு படம் வேண்டும் என சொல்லி இருக்கிறார். அதற்கு முன்பே பசங்க படத்தைப் போன்று இன்னொரு படத்தை பண்ண வேண்டும் என பாண்டிராஜ் நினைத்தாராம். அந்த ஸ்கிரிப்ட் பற்றி சிவகார்த்திகேயனிடம் சொல்ல இந்த மாதிரி படம் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால் எனக்கு கடைக்குட்டி சிங்கம் மாதிரி படம் வேண்டும் என கேட்டு இருக்கிறார். அப்படித்தான் வேண்டுமா சரி என நினைத்து அதன் பிறகு தான் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் உருவானது என பாண்டிராஜ் அந்த பேட்டியில் கூறுகிறார்.

Next Story