Categories: Cinema News latest news

ஹாலிவுட்டை மிஞ்சும் சிவகார்த்திகேயனின் புதிய படம்.! தெறிக்கும் தமிழ் சினிமா.!

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் தற்போது “அயலான்” படத்தினை சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து இயக்குவது அனைவருக்கும் தெரிந்ததே அது மட்டும் இல்லாமல். இப்படத்தினை பிரமாண்ட பட்ஜெட் கொண்டு தயாரிக்கும் இப்படத்தில் வேற்று கிரக வாசி கதைக்களம் என்பதால் கிராபிக்ஸ் பணிகளுக்கே வருடங்கள் தாண்டி வேலை செய்து வருகிறார் ரவிக்குமார்.

ஆனால், இன்னும் பட பணிகள் முடிந்த பாடில்லை. அந்தளவுக்கு காட்சி சரியாக வரவேண்டும் என ஏதிர்பார்ப்புக்களை கொண்டு இப்படத்தின் பணிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. தற்போது இப்படத்தின் எடிட்டர் ரூபன் இப்படத்திற்கு தீவரமாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன்… நெல்சனின் விருப்பத்தை உதறி தள்ளிய விஜய்.! அப்படி மட்டும் நடந்திருந்தால்…

இப்படத்தை பற்றி கூறிய ரூபன் இப்படம் ஹாலிவுட் படம் போலே இருக்கும் எனவும் ஏன்னென்றால் இப்படத்தில் அந்த அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும், சிவகார்த்திகேயனுக்கு இப்படம் நல்ல வெற்றியை தரும் எனவும் கூறினார்.

மேலும், இப்படத்தில் பிரமாண்ட ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் இந்த படம் வெளியாக இன்னும் ஒரு வருடம் கூட எடுக்கலாம் என ரூபன் கூறினார்.

Manikandan
Published by
Manikandan