ஆர்த்தி இத சொல்லலைனா சினிமாவ விட்டிருப்பேன்... மனம் திறந்த சிவகார்த்திகேயன்
இன்றைய சூழலில் டாக் ஆஃப் தி டவுனாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் அதற்கு முக்கிய காரணம் அவருடைய அமரன் திரைப்படம் சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை அடைந்திருக்கிறது. குறிப்பாக சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் அதிக வசூலை செய்த படமாக அமரன் திரைப்படம் அமைந்திருக்கிறது.
அதில் உண்மையாகவே ராணுவ வீரராகவே வாழ்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் அவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலக முடிவு செய்த சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்து இருக்கிறார். தனது போராட்டங்களைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன் அவர் எப்போதும் படங்களில் நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை விட அதிக பாராட்டுகளை பெற வேண்டும் என விரும்புவாராம்.
ஒரு கட்டத்தில் அவருடைய வாழ்க்கை நிச்சயமற்றதாக இருப்பதாக உணர்ந்த சிவகார்த்திகேயன் அந்த நேரத்தில் இன்டஸ்ட்ரியில் இருந்து விலக முடிவெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆறுதலாக இருந்தது அவருடைய மனைவி ஆர்த்திதானாம். சிவகார்த்திகேயனிடம் ஆர்த்தி இந்த மாதிரி முடிவை எடுப்பது தவறு என ஆலோசனை கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல ஒருவனிடம் எதுவும் இல்லாதபோது அவன் கொண்ட இலக்கை அடைய கடுமையாக போராட வேண்டும் என்பதையும் ஆர்த்தி சிவகார்த்திகேயனுக்கு உணர்த்தியிருக்கிறார்.
இதனால் சிவகார்த்திகேயன் இந்த முடிவை மாற்றிக் கொள்ளும் வரை தொடர்ந்து அதைப்பற்றி பேசிக் கொண்டே இருந்தாராம் ஆர்த்தி. அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் ஒரு சில விமர்சனங்களுக்கு உள்ளானார்.அப்போது ஆர்த்தி பேசிய அந்த வார்த்தைகள் தான் அவருக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தன் மனைவியிடம் இருந்து இந்த சக்தி வாய்ந்த அறிவுரை எனக்கு ஊக்கம் அளித்தது. தொடர்ந்து விடாமல் முயற்சியுடன் போராட என்னை மேலும் தூண்டியது என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் .அதனால் ஆர்த்தியின் இந்த வார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி சிவகார்த்திகேயனின் தொடர்ச்சியான வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்போது சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸுடன் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். அதற்கு அடுத்தபடியாக சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்.