×

சிவகாசி சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை - அசாம் வாலிபர் கைது

சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கிருத்திகா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே, போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இதில், அப்பகுதியில் தங்கியிருக்கும் வடமாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, 4 பேர் மீது சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்கிற வாலிபர் இந்த கொடுமையை செய்தது தெரியவந்துள்ளது. எனவே அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News