Categories: Cinema News latest news throwback stories

சினிமா வேஸ்ட்!..சீரியல்லதான் எனக்கு எல்லாம் கிடைச்சுது!.. சிவக்குமாருக்கு இப்படி ஒரு சோக கதையா?..

தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். வாலிப வயதில் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட அவரின் குடும்பம் அதை ஏற்கவில்லை. சினிமாவுக்கு போனால் கெட்டுப்போய்விடுவாய் என தடை போட்டனர். எனவே, சிகரெட் குடிக்க மாட்டேன், அது அருந்த மாட்டேன், எந்த நடிகையுடன் தவறான உறவில் பழக மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டுதான் சினிமாவுக்கு வந்தார். அந்த சத்தியத்தை இப்போது வரை பின்பற்றியும் வருகிறார்.

துவக்கத்தில் பக்தி படங்களில் நடித்தார். அதன்பின் மெல்ல மெல்ல சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் கதாநாயகனகாவும் நடிக்க துவங்கினார். வயதான பின் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பாலச்சந்தர் இயக்கத்தில் இவர் நடித்த சிந்து பைரவி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஒருகட்டத்தில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு சிரீயலில் நடித்தார். கையளவு மனசு, ரேவதி, புஷ்பாஞ்சலி, வீட்டுக்கு வீடு வாசப்படி, பந்தம், எத்தனை மனிதர்கள், காவேரி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். குறிப்பாக ராதிகா நடிப்பில் சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சித்தி சீரியலிலும் நடித்தார்.

Sivakumar

இந்நிலையில், சினிமாவில் நடித்த சம்பளத்தை வைத்து சிவக்குமார் ஒரு காரை கூட சொந்தமாக வாங்கவில்லையாம். இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள சிவக்குமார் ‘சினிமாவில் நான் ஒரு வருடம் நடித்தால் கூட 2 லட்சம் பணம் சம்பாதிப்பேன். ஆனால், சீரியலில் ஒரு மாதத்திலேயே அந்த பணம் எனக்கு கிடைத்தது. உண்மையில் சீரியலில் நடித்து சம்பாதித்த பணத்தை வைத்துதான் முதன் முதலாக புதிய காரையே வாங்கினேன்’ என சிவக்குமார் பேசியுள்ளார்.

சிவக்குமார் சினிமாவில் நடித்த காலத்தில் குணச்சித்திர நடிகர்களுக்கு மிகவும் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா