Categories: Cinema News latest news

சிவக்குமாரின் அட்வைஸை மதிக்காத சத்யராஜ்!..இப்போ எந்த நிலைமையில இருக்காருனு பாருங்க!..

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னனி நடிகர்களாக இருந்தவர்கள் நடிகர் சிவக்குமார் மற்றும் நடிகர் சத்யராஜ். நடிகர் சிவக்குமார் சத்யராஜூக்கு முன்னதாகவே சினிமாவிற்குள் வந்து பல சரித்திர படங்களில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற பழம்பெரும் நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் ஓவிய ஆசியராக வேண்டும் என்ற நோக்கில் சென்னைக்கு வந்த சிவக்குமார் நடிகராகி இன்று பல பிரபலங்கள் மதிக்கும் ஒரு நல்ல மனிதராக திகழ்கிறார். அடிப்படையில் பெரிய பணக்கார வீட்டு பையனாக இருந்தவர் தான் நடிகர் சத்யராஜ். ஜமீன்தார் பரம்பரையில் இருந்து வந்தவர்.

சினிமாவின் மிதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர் சிவக்குமார் நடித்த அன்னக்கிளி படத்தின் படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறார். சிவக்குமாரும் சத்யராஜும் ஒரே ஊர்க்காரர்கள் என்ற முறையில் சிவக்குமாரை சந்திப்பதற்காக படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறார். அவர் மூலமாக ஏதாவது வாய்ப்புகள் கிடைக்கும் என்ற முறையில் போயிருக்கிறார்.

ஆனால் சத்யராஜின் ஆசையை தெரிந்த சிவக்குமார் சினிமாவில் ரொம்பவே கஷ்டப்படனும், இது உனக்கு செட் ஆகாது, சொந்த ஊர்க்கே சென்று விடு என்று அட்வைஸ் பண்ணியிருக்கிறார் சிவக்குமார். ஆனால் அதை பற்றி எல்லாம் மனதில் கொள்ளாமல் சென்னையிலேயே தங்கி நடிக்கிறதுக்குண்டான வாய்ப்புகளை தேடி அலைந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள், 24 மணி நேரம் போன்ற படங்களில் வில்லனாக அறிமுகமானார் சத்யராஜ். தொடர்ந்து அவர் செய்த முயற்சியால் இன்று அவர் ஒரு உச்ச நட்சத்திரமாகவே திகழ்ந்து வருகிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini