Categories: Cinema News latest news

என் அம்மாவின் தோழியுடன் மேட்டர் பண்னேன்… ரியாலிட்டி ஷோவில் சர்ச்சையை ஏற்படுத்திய இளம் நடிகர்….!

பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது லாக் அப் என்ற புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் பல நடிகர் மற்றும் நடிகைகள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் நடிகர் சிவம் சர்மாவும் இந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் நிகழ்ச்சியில் பேசிய விஷயம் ஒன்று மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சிவம் சர்மா கூறியுள்ளதாவது, “என் தாயின் தோழியுடன் நான் உறவு கொண்டேன். விவாகரத்தான அவர் எங்கள் வீட்டிற்கு அருகில் தான் வசித்தார். அவர் விவாகரத்து ஆனவர் என்பதால் உறவு கொண்டது தவறு இல்லை.

அவர் வாழ்க்கையில் உதவி தான் செய்தேன். இது எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன்பு நான் கல்லூரி படித்த போது நடந்த விஷயம். அந்தப் பெண்ணின் வாழ்க்கை சோகமாக இருந்ததால் நான் சந்தோசம் அளித்தேன். நான் ஒன்றும் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. அவருக்கு செக்ஸ் வேண்டியிருந்தது.

நான் அழகான பையன் அதனால் அவருக்கு என்னை பிடித்திருந்தது போல. அதனால் இது ஒரு தப்பே இல்லை. இருவருமே விரும்பித்தான் செய்தோம். ஆனால் இது காதலும் இல்லை” என்று கூறியுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் தன் தாயின் தோழியுடன் உறவு வைத்ததை நடிகர் ஒருவர் வெளிப்படையாக பேசியுள்ளது பாலிவுட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா