சந்தானம் முதல் சிவகார்த்திகேயன் வரை தமிழ் சினிமாவிற்கு பல நடிகர்களை வழங்கிய பங்கு விஜய் டிவியை தான் சேரும். விஜய் டிவியில் இருந்து ஆண்டுதோறும் நிறைய காமெடி நடிகர்கள் திரைத்துறைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது புதுவரவு தான் சூப்பர் சிங்கர் பிரபலம் சிவாங்கி.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவாங்கியின் குழந்தை தனம் மற்றும் குறும்புத்தனம் காரணமாக அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சிவாங்கியின் காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைக்கவே அவர் மேலும் பிரபலமானார்.
எந்த அளவிற்கு என்றால் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் குவியும் அளவிற்கு. சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்துள்ள சிவாங்கி மேலும் சில புதிய படங்களில் நடித்து வருகிறார். பாடகியாக நுழைந்த இவர் நடிகையாக அவதாரம் எடுப்பார் என்று அவரே நினைத்திருக்க மாட்டார்.
சரி நாம் விஷயத்திற்கு வருவோம். என்னதான் சிவாங்கி படங்களில் நடித்து வந்தாலும் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த எபிசோடில் தனக்கு எப்படிப்பட்ட காதலர் வேண்டும் என்பதை சிவாங்கி வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதன்படி சிவாங்கிக்கு பிரபல தெலுங்கு நடிகரும் பல பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வருபவருமான விஜய் தேவரகொண்டா போல ஒரு காதலர் வேண்டுமாம். இதனை கேட்ட ரசிகர்கள் அஷ்வின் பின்னாடி சுத்திட்டு இருந்த இப்போ இப்படி சொல்ற? அப்போ அதெல்லாம் வெறும் நடிப்பா? என கலாய்த்து வருகிறார்கள்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…