அஜித்துக்கு வில்லனான சூப்பர் ஸ்டார்!.. யாருன்னு பாருங்க!..

 
dare

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் டேர் டெவில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தற்போது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் மற்றும் ஜெயிலர் 2  திரைப்படத்தில்  சிறப்புத் தோற்றத்தில் நடித்த சிவராஜ்குமார், தனது கேமியோக்கே தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் தற்போது அஜித்துக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும்டேர் டெவில் படத்தில் அஜித்துடன் ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், பிரபு, பார்த்திபன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில்,  2027ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித், சிவராஜ்குமார் என இரண்டு முன்னணி நடிகர்கள் நேருக்கு நேர் மோதும் இந்தக் கூட்டணி, டேர் டெவில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

CR  Desk
CR Desk

7927 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web