கார்த்திக் சுப்பாராஜுக்கு பேர் வாங்கி கொடுத்த திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் பாபி சிம்ஹா,சித்தார்த்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
அதன்பின் சில திரைப்பட்ங்களை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருந்தாலும் ஜிகர்தண்டாவை போல எந்த படமும் ரசிகர்களை கவரவில்லை.
தற்போது ஜிகர்தண்டா 2ம் பாகத்தை இயக்கும் முயற்சியில் கார்த்திக் சுப்பாராஜ் இறங்கியுள்ளார். இந்த முறை இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
மேலும், எஸ்.ஜே. சூர்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ரூ.150 கோடி வசூல் செய்ய வேண்டும் என கணக்கு போட்டு வேலை செய்து வருகிறாராம் கார்த்திக் சுப்பாராஜ்.
ஜிகர்தண்டா 2-வில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…