ஹிட் ஆகுமா? ஆகாதா? விஜய் பட பாடலை வைத்து பெட் கட்டிய எஸ்.ஜே. சூர்யா.. கடைசில நடந்தது!

by Rohini |
vijay
X

vijay

எஸ்.ஜே. சூர்யா:

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்ல தெலுங்கு கன்னடம் ஹிந்தி என ஒரு பேன் இந்தியா நடிகராகவே இன்று மாறி இருக்கிறார். ஆனால் இவர் சினிமாவிற்கு வரும்பொழுது எப்படிப்பட்ட மனநிலையில் வந்தார். எந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்தார் என அனைவருக்குமே தெரியும். வாலி படத்தில் இயக்குனராக அறிமுகமாகும் போது தன்னுடைய நிலைமை எப்படி இருந்தது. அஜித் அதை எப்படி ஹேண்டில் செய்தார் என்றெல்லாம் பல பேட்டிகளில் கூறி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

அறுந்த செருப்புடன் அழுக்கு சட்டையுடன் இப்படித்தான் சினிமாவிற்குள் நுழைந்தேன். அதை பார்த்த அஜித் என்னுடைய இயக்குனர் இப்படி இருக்க கூடாது என முற்றிலுமாக மாற்றினார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரு கார் வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகு குஷி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. அதுவும் பிளாக் பாஸ்டர் வெற்றியடைந்தது. இயக்கியது இந்த இரண்டு படங்கள்தான். ஆனால் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வெற்றியை இந்த இரு படங்களும் அதுவும் அஜித் விஜய் போன்ற மாபெரும் ஆளுமைகளை வைத்து இயக்கிய இந்த இரண்டு படங்களும் அவர்களுடைய கெரியரில் டாப் 10 லிஸ்டில் இருக்கும் படங்களாக அமைந்திருப்பதில் எஸ் ஜே சூர்யாவின் பங்கு மிக முக்கியமானது.

வில்லன் அவதாரம்:


இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் எந்த படங்களையும் இயக்கவில்லை. நடிகராக மாறினார். ஹீரோவாக அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் மக்களால் ஈர்க்கப்படவில்லை. அதன் பிறகு வில்லன் அவதாரம் எடுத்தார். வில்லன் கதாபாத்திரத்தில் மெர்சல் படத்தில் காட்டிய அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மார்க் ஆண்டனி திரைப்படத்தில் அனைவரையும் பிரமிக்க வைத்தார். அந்த படத்திற்கு பிறகு தான் அவருக்கு நடிப்பு அரக்கன் என பெயர் வந்தது.

இந்த நிலையில் ரசிகர்களின் பல்ஸ் எப்படியாக இருக்கிறது என்பதை பார்த்து சொல்பவர் எஸ் ஜே சூர்யா என இசையமைப்பாளர் தேவா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். குஷி படத்தின் போது மேகம் கருக்குது பாடல் டியூன் போட்டுக் கொண்டிருந்தாராம் தேவா .அந்த டியூன் யார் வேண்டுமென்றாலும் போடலாம். அவரைப் பொறுத்த வரைக்கும் என்னுடைய பாடலை இன்னொரு இசையமைப்பாளர் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் எனக்கு பெருமை.

பாடல் மீதான நம்பிக்கை:

ஆனால் இந்த பாடலை பொருத்தவரைக்கும் சாதாரண டியூனாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு அந்த டியூனில் திருப்தி இல்லை. என்னுடைய உதவியாளருக்கும் அந்த பாடலில் திருப்தி இல்லை அதனால் வேற டியூன் போடலாம் என்ற முடிவுக்கு வரும்பொழுது இதை சூர்யாவிடம் என்னுடைய உதவியாளர் சொல்ல எஸ் ஜே சூர்யா இதைக் கேட்டு கண்டிப்பாக இந்த பாடல் ஹிட் ஆகும். ஹிட்டாகவில்லை என்றால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.


கண்டிப்பாக ஹிட்டாகும். நான் பெட்டு கட்டுகிறேன். ஒருவேளை ஹிட்டாகிவிட்டால் உனக்கு நான் ஒரு கார் வாங்கி தருகிறேன் என்று அந்த உதவியாளரிடம் கூறியிருக்கிறார். அவர் சொன்னதைப் போலவே மேகம் கருக்குது பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாக அந்த உதவியாளருக்கு எஸ் ஜே சூர்யா கார் ஒன்றை வாங்கி கொடுத்தாராம். இதை ஒரு பேட்டியில் தேவா கூறும் பொழுது ரசிகர்களின் பல்சை பிடித்து பார்ப்பவர் போல அவர்களுடைய ரசனை எப்படி இருக்கிறது என்பதை பார்த்து சொல்லுபவர் எஸ் ஜே சூர்யா என கூறி இருக்கிறார்.

Next Story