SJ Surya: ஒரு சில நடிகர்களுக்கு தான் இரண்டாம் இன்னிங்ஸ் பக்காவாக அமையும் அதே ரீதியில் தான் இருக்கிறார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. வரிசையாக அவர் நடிக்கும் படங்களில் அப்டேட்கள் ஆச்சரியத்தினை கொடுத்து வரும் நிலையில் இன்று இன்னொரு அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது.
அஜித்தின் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. அதனை தொடர்ந்து விஜயை வைத்து குஷி படத்தினை இயக்கினார். இரண்டுமே மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து நியூ என்ற் படத்தினை இயக்கி நடிக்க அதுவும் ஹிட்டானது. தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டினார்.
இதையும் படிங்க: ஏகப்பட்ட யூகங்கள்… போட்டி போட்டுக்கொள்ளும் முன்னணி இயக்குனர்கள்… யார் அந்த தளபதி69 இயக்குனர்?
கொஞ்சம் கொஞ்சமாக இயக்கத்தினை விட்டவர் தொடர்ந்து நடிகராக வலம் வந்தார். இறைவி படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து மெர்சலில் வில்லன் அவதாரம் எடுக்க அங்கு கிளம்பியது அவரின் கேரியரின் வளர்ச்சி. செம வரவேற்பு கிடைக்க தொடர் வில்லன் ரோலை ஓகே செய்து வருகிறார்.
மாநாடு, டான் என வரிசையாக வில்லன் ரோலில் கலக்கி வந்தவருக்கு மார்க் ஆண்டனி திரைப்படம் தான் நடிப்பு அரக்கன் என்ற பட்டத்தினை பெற்று தந்தது. தொடர்ச்சியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸில் ஹீரோ அவதாரம் எடுக்க அதுவும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
இதனால் கோலிவுட்டில் வாண்ட்டட் நாயனாகி இருக்கும் எஸ்.ஜே.சூர்யா லிஸ்ட்டில் தற்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. சரிபோதா சனிவரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்தியன்2, தனுஷின் 50 வது படம், கேம் சேஞ்சர், லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாது அஜித்தின் அடுத்த வில்லனும் எஸ்.ஜே.சூர்யா என்றே கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகையின் மீது தீவிர காதல் கொண்ட ரஜினிகாந்த்…! அம்மா பேச்சை கேட்டு அமைதியான பின்னணி…
இப்படத்தினை சித்தா இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் கோட் திரைப்படம், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படம், ராஜு முருகனின் அடுத்த படம் என கோலிவுட்டின் அடுத்த இன்னிங்க்ஸ் எஸ்.ஜே.சூர்யா கையில் தான் இருக்கின்றது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…