கடந்தாண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாநாடு படத்தில் தனது அசுரத்தனமான நடிப்பால் வில்லனாக நடித்து மிரட்டியவர் தான் நடிகர் எஸ்ஜே சூர்யா. இந்த படத்தில் சிம்புவை விட எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு தான் அனைவராலும் பாராட்டப்பட்டது.
ajith
ஆனால் எஸ்ஜே சூர்யா ஒரு இயக்குனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர் ஆரம்பகாலத்தில் குஷி வாலி போன்ற சிறந்த படங்களை இயக்கி உள்ளார். இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் தான் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.
அதிலும் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வாலி படம் அஜித்துக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. முதல் முறையாக அஜித் இரட்டை வேடத்திலும், முதல் முறையாக நெகடிவ் கதாபாத்திரத்திலும் நடித்த படம் என்றால் அது வாலி படம் தான்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நடிகைகள் சிம்ரன் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்து இருந்தனர். இசையமைப்பாளர் தேவா இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்தன. தற்போது வரை அஜித்தின் கெரியரில் ஒரு சிறந்த படமாக வாலி படம் உள்ளது.
sj surya
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம், அஜித்குமாரை தவிர வாலி படத்தில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, “இதில் நடிகர் ஷாருக்கான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என கூறினார்.
இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏனெனில் வாலி படத்தில் அஜித்தை தவிர வேறு யாராலும் அந்த அளவிற்கு நன்றாக நடித்திருக்க முடியாது. அஜித்திற்கு நிகர் அஜித் மட்டுமே. அப்படி இருக்கும்போது எஸ்ஜே சூர்யா எப்படி அவ்வாறு கூறலாம் என அஜித் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…