Categories: Cinema News latest news

ஒரு வழியா பிரதீப் ரங்கநாதன் படத்தை ஆரம்பிக்கும் நயன்தாரா கணவர்!.. அந்த ஹிட் ஸ்டாரும் இணைந்துள்ளாராம்!..

இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கப் போவதாக அறிவித்து இருந்தார். ஆனால், 6 மாத காலமாக அந்த படத்தை ஆரம்பிக்காமல் நயன்தாராவுடன் சுற்றிக் கொண்டு ஏகப்பட்ட போட்டோக்களையும் பல புதிய தொழில்களையும் ஆரம்பித்து வந்தார்.

இந்நிலையில், நயன்தாரா ஏற்கனவே கமிட் ஆன படங்களின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையில், தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருந்த டீமுக்கு தற்போது விஜய்யின் லியோ பட தயாரிப்பாளர் வசமாக சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: மிரட்டிய சிவக்குமார்!.. அதிர்ந்துபோன அர்ஜூன்.. அவரு அப்பவே அப்படிதான் போலயே!..

லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மேலும் ஒரு பிரபல லக்கி ஸ்டார் படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

அந்த லக்கி ஸ்டார் வேறு யாருமில்லை, நம்ம எஸ்.ஜே. சூர்யா தான். சிவகார்த்திகேயனுக்கு டான், சிம்புவுக்கு மாநாடு, விஷாலுக்கு மார்க் ஆண்டனி, ராகவா லாரன்ஸுக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என தொடர்ந்து நடிகர்களுக்கு ஹிட் கொடுத்து வரும் எஸ்.ஜே. சூர்யா கமிட் ஆகியிருப்பதாக அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: இதுதான் கரெக்ட் டைம்!.. சிவகார்த்திகேயனுக்கு கட்டம் கட்டிய தனுஷ்!.. தப்பிப்பாரா எஸ்.கே?!..

மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்றும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ள நிலையில், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன.

Saranya M
Published by
Saranya M