×

தியேட்டரை நம்பி யூஸ் இல்ல!... வெப்சீரியஸில் களம் இறங்கும் எஸ்.ஜே.சூர்யா....

இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா புதிய வெப்சீரியஸில் நடிக்கவுள்ளார்.
 
sj suriya

அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘வாலி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தில் கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், அஜித் மற்றும் சிம்ரனின் நடிப்பிற்காக இப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

suriya

இப்படத்திற்கு பின் விஜய், ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். இப்படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதன்பின் எஸ்.ஜே. சூர்யா மற்ற நடிகர்களை வைத்து படம் இயக்காமல், தானே நடிகராக மாறினார்.

sj suriya

நியூ, அன்பே ஆருயிரே, இசை என அவரே நடித்து படங்களை இயக்கினார். அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். வியாபாரி, திருமகன், நண்பன், இறைவி, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர்,நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது சிம்புவுடன் மாநாடு படத்தில் அவர் நடித்துவருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

suriya

இந்நிலையில், ஒரு புதிய வெப் சீரியஸில் நடிக்க எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளார். இந்த வெப்சீரியஸை ‘கொலைகாரன்’ படத்தை இயக்கிய ஆண்ட்ரு லூயிஸ் இயக்கவுள்ளார். இப்படத்தை ஓடிடி நிறுவனமான அமேசான் தயாரிக்கவுள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

sj suriya

இந்த வெப் சீரியஸ் க்ரைம் திரில்லர் கதையாக உருவாகவுள்ளது. தமிழில் ஏற்கனவே நவம்பர் ஸ்டோரி மற்றும் The famlyman 2 ஆகிய வெப்சீரியஸ்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பல இயக்குனர்கள் வெப் சீரியஸ் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News