Categories: Cinema News latest news

SK 24: SK 23க்கே முடிவு தெரியல.. லிஸ்ட்ல சேர்ந்த அடுத்த படம்! ஆனால் நடந்ததுதான் வேற

SK 24: அமரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து என்னென்ன படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் .அமரன் திரைப்படம் 320 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. அதனால் இனி வரும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அமரன் திரைப்படத்தை விட அதிக வசூலை பெற வேண்டும்.

அந்த ஒரு பிரஷர் இப்போது சிவகார்த்திகேயன் மீது விழுந்திருக்கிறது. அவர் நடித்து வெளியான திரைப்படங்களிலேயே அமரன் திரைப்படம் மட்டும் தான் இவ்வளவு கோடி வசூலை பெற்றிருக்கிறது. இனிவரும் படங்களும் அதிக அளவு வசூல் பெற்றால்தான் அவருடைய மார்க்கெட் எந்த லெவலில் இருக்கும் என சொல்ல முடியும்.

இதையும் படிங்க: சிறந்த நடிகர்கள் ரஜினி, கமல் எல்லாம் இல்லை… இவர்தான் பெஸ்ட்… ஆர். ஜே பாலாஜி சாய்ஸ்..

அதனால் இனிமேல் சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் படங்களை மிகக் கவனமுடன் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். அப்படி ஒரு பிரஷரில் தான் இப்போது இருக்கிறார் .தற்போது சிவகார்த்திகேயன் அவருடைய 23 வது திரைப்படம் ஆன இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் .அந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே துப்பாக்கி ,கத்தி போன்ற விஜய் வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ். நீண்ட நாளுக்கு பிறகு தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார் .அதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது .அடுத்ததாக அவருடைய லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன.

அமரன் திரைப்படத்திற்கு முன்பாகவே சிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் இன்னொரு படத்தில் இணைய இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. டான் படத்திற்குப் பிறகு மீண்டும் சிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் அவருடைய 24வது படத்தில் இணைகிறார். அதற்கான பூஜையும் போடப்பட்டது.

இதையும் படிங்க: எல்லாரும் டைவர்ஸ் பண்றாங்க!. எதுக்கு கல்யாணம்?.. இப்படி சொல்லிட்டாரே திரிஷா!..

அதனால் அந்த படத்தின் சூட்டிங் இன்று ஆரம்பிக்கப்பட்ட இருந்தது. ஏதோ சில காரணத்தால் இன்று நடக்க இருந்த படப்பிடிப்பு நடக்கவில்லை. அதனால் அடுத்த வாரம் அதற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கப் போவதாக தெரிகிறது. பிப்ரவரி மாதம் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வருவதால் அப்போது 24வது படத்தின் டீசர் மற்றும் டைட்டில் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sibi

தற்போது வரை இந்த படத்தின் தலைப்பு பாஸ் என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள். ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் உடன் இணையும் படத்தின் தலைப்பும் இதுவரை தெரியவில்லை .அடுத்ததாக அவருடைய 24ஆவது படத்தின் தலைப்பும் சந்தேகத்தின் பெயரிலேயே இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து அவருடைய லைன் அப் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini