ஒரு வழியா ஆரம்பிச்சுட்டாங்க.. எஸ்கே 25 படத்தின் ஸ்குவாட் இதோ! வெளியான புகைப்படம்
அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அவருடைய 25வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். எப்படி பல சர்ச்சைகளுக்கு பிறகு எஸ்கே 25 படத்தின் படப்பிடிப்பு இன்றுதான் ஆரம்பித்திருக்கிறது. அது சம்பந்தமான புகைப்படம் தான் இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம்தான் அமரன். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்றது. எந்தவொரு படமும் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்புதான் ஓடிடியில் வெளியாகும். ஆனால் 8 வாரத்திற்கும் மேலாக திரையரங்கில் கூட்டம் அலைமோதியதால் ஓடிடியில் அமரன் திரைப்படத்தை தாமதமாகத்தான் வெளியிட்டார்கள்.
அந்தளவுக்கு அமரன் திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. அதே சமயம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவருடைய 23வது படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்த படியாக அவருடைய 24வது படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். ஏற்கனவே சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்திருந்தார்,
டான் படமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இரண்டாவது முறையாக இணையும் இந்த கூட்டணி மீது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில்தான் ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்து அதன் பிறகு சூர்யா விலக அந்த படத்தில் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என தெரிகிறது.
மேலும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி வில்லனாகவும் நடிக்கிறார். கூடவே அதர்வாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருக்கிறது. இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்திருப்பதால் அது சம்பந்தமான புகைப்படம் வெளியாகியிருக்கிறது.