×

ஸ்லிம்மானார்.......... பூனம் பஜ்வா! 

 
poonam1

தமிழ்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் எப்போதும் தங்கள் உடலை மிடுக்கான தோற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றே விரும்புவர். சிலர் தங்கள் உடலை எப்போ தேவையோ அப்போ கூட்டுவர். எப்போ தேவையா அப்போ குறைத்துவிடுவர். படத்திற்கேற்ற பாத்திரத்திற்கேற்ப தங்கள் உடலை மாற்றிக்கொள்வார்கள். இந்த வகையில் நடிகர்களில் கமல்ஹாசன், விக்ரம் போன்ற நடிகர்கள் தங்கள் உடலை அப்பப்போ மாற்றி வருவது வழக்கம். அதேபோல் நடிகைகளும் எப்போதுமே தங்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை கொள்வர். அவர்களுக்கு கட்டுக்கோப்பான உடல் தான் அழகு. அத்துடன் நடிப்பாற்றல். இவை தான் சினிமாவில் வெற்றிகரமாக உலா வர மூலதனம். 

அதனால் கொஞ்சம் எடை போட்டால் கூட கவலைப்பட ஆரம்பித்துவிடுவர். உடனே ஜிம் போவது, பட்டினியாய் கிடப்பது, ஜூஸ் மட்டும் குடிப்பது என தங்களுக்கு எதெல்லாம் தெரியுமோ அத்தனை விஷயங்களையும் செய்து உடலை எப்பாடுபட்டாவது ஸ்லிம்மாக்கி விடுவர். ஒருசிலரால் அப்படி ஸ்லிம்மாக முடியாமல் போனால் அதோ கதிதான். அவர்களை அக்கா, அண்ணி வேடத்திற்குத் தான் போடுவார்கள். இதற்குப் பயந்தே கதாநாயகிகள் தங்கள் உடலைக் கச்சிதமாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் ஸ்லிம்மாக இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். அந்த வகையில் நடிகை பூனம் பஜ்வா தற்போது ஸ்லிம்மாகி உள்ளார்.

தமிழ்பட உலகின் இளம் கதாநாயகி பூனம் பஜ்வா. மும்பை வரவான இவர் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி, ஆம்பள, அரண்மனை 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்துள்ளார். பன்மொழிப்படங்களில் தான் நடித்து விட்டோம் என்ற குஷியில் பூனம் ஒரு ரவுண்டு பருத்து விட்டார். 

அதன்பிறகு தான் அவருக்கே தெரிந்தது. குண்டாகி விட்டோமே என்று. இப்படி இருந்தால் கதாநாயகியாக எப்படி நடிக்க முடியும்? அண்ணி, அக்கா வேடம் தான் கிடைக்கும் என்று அவருக்கு நெருக்கமான நண்பிகள் சொல்ல...அதைக் கேட்டு மிரண்டு போய்விட்டார். 

தன் உடல் எடையைக் குறைக்க என்ன மந்திரம் செய்தாரோ...மாயம் செய்தாரோ தெரியவில்லை. தற்போது சிக்கென்று உடம்பைக் குறைத்து அவருக்கே தங்கை போல இருக்கிறார்.

  

From around the web

Trending Videos

Tamilnadu News