×

தாறுமாறாக ஓட்டிய சினேகன்... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! போலிஸ் விசாரணை!

கவிஞர் சினேகன் கார் மோதியதில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அருகேயுள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம். 

 

இவரது மகன் அருண்பாண்டி (28). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் சவேரியார்புரத்தில் இருந்து திருமயத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது கவிஞர் சினேகன் ஓட்டிச்சென்ற கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அருண் பாண்டி படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இளைஞர் அருண் பாண்டி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News