முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பிரசன்னா - சினேகா!.. குழந்தைங்க செம க்யூட்!..

 
sneha

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான சினேகா, தனது குடும்பத்துடன் தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

sneha

2000-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகா விஜயுடன் இணைந்து நடித்த படங்களில் முதன்மையானது வசிகரா. இந்த திரைப்படத்தில் விஜய் – சினேகா ஜோடி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.  அதைத் தொடர்ந்து புதிய கீதை திரைப்படத்திலும் விஜய் மற்றும் சினேகா இணைந்து நடித்தனர். மேலும், இறுதியாக கோட் படத்திலும் இவர்களின் காம்பினேஷன் பட்டயை கிளப்பியது.

prasanna

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த சினேகா, பின்னர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அண்மையில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் குடும்ப புகைப்படங்கள், உடற்பயிற்சி தொடர்பான பதிவுகள் மற்றும் தனது தினசரி வாழ்க்கை குறித்த அப்டேட்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

vijay

கணவர் பிரசன்னா மற்றும் குழந்தைகளுடன் நடிகை சினேகா சந்தித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீப காலமாக பல திரையுலக பிரபலங்கள் முதலமைச்சர் விஜயை சந்தித்து வரும் நிலையில், சினேகாவின் குடும்ப சந்திப்பும் பேசுபொருளாகியுள்ளது. மேலும், இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Tags

From Around the web