Categories: Cinema News latest news

கொட்டும் மலையில் நடுரோட்டில் ஆட்டம்போட்ட சினேகா..

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. தமிழ் ரசிகர்களால் இவர் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்பட்டார். நடிப்பில் வெளியான ‘என்னவளே’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதனால் ஆனந்தம், பார்த்தாலே பரவசம் என ஒருசில படங்களில் நடித்தார். அதன்பின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் இவரது ஆதிக்கம்தான். கமலுடன் பம்மல் கே.சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், சூர்யாவுடன் உன்னை நினைத்து, விஜய்யுடன் வசீகரா, அஜித்துடன் ஜனா என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

sneha

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை குசேலன் படத்தில் சிறிய காட்சியில் நடித்து தீர்த்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறையவே சிறுசோறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கண்டார். திருமணத்திருப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கருப்பு நிற உடையில் சென்னையில் கொட்டும் மலையில் நடுரோட்டில் ஆட்டம்போட்டபடி உள்ளார். இந்த படத்தில், வயசானாலும் உங்கள் அழகு குறையவே இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

sneha

கடைசியாக தனுஷுடன் பட்டாசு படத்தில் நடித்த இவர் தற்போது ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்