Connect with us

Cinema News

ஒரு தடவை போட்டா இன்னொரு முறை திரும்பி பார்க்கவே மாட்டேன்… சினேகா மேடம் இப்படியா சொல்லுவீங்க!

Sneha: நடிகை சினேகா தனக்கு நடந்த அசிங்கத்தால் அந்த ஒரு விஷயத்தினை மட்டும் ஒருமுறை செய்துவிட்டு பின்னர் கண்டுக்கவே மாட்டாராம். இப்படி கூடவா பிரச்னை வரும் என அவர் பேட்டியில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் பெண்ணான நடிகை சினேகா விரும்புகிறேன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பு கிடைக்க அம்மணிக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார்.

இதையும் படிங்க: விஜய்க்காக இறங்கி வந்த லாரன்ஸ்! அடுத்து அரசியலிலும் ஆட்டம் காட்டுவார்களா? வைரலாகும் வீடியோ

கல்யாணம் முடிந்ததும் எப்போதும் போல சினேகா மார்க்கெட் சரிந்தது. இதனால் சினிமாவில் கேரக்டர் ரோல் மட்டுமே செய்து வருகிறார். முதல்முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதுவும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

தொடர்ச்சியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து இருந்தார். இதையடுத்து, தற்போது விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அப்பா விஜயிற்கு ஜோடியாக கூட இருக்கலாம் எனத் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: கேப்டனாக மாறிய வினுசக்கரவர்த்தி! கலாட்டா செய்த ரசிகர்களை என்ன செய்தார் தெரியுமா?

இந்நிலையில், நடிகை சினேகா அளித்திருக்கும் பழைய பேட்டியில், நான் ஒருமுறை எனக்கு பிடித்த ஒரு சுடிதாரை இரண்டாவது முறையாக போட்டுவிட்டேன். அதை சில மீடியாக்களில் சினேகா பழசை போடுறாங்க. அவங்களிடம் டிரெஸே இல்லை என எழுதிவிட்டனர். அது எனக்கு அவமானமாக இருந்தது.

இதை தொடர்ந்து, ஒருமுறை போட்ட டிரெஸை மறுமுறை போடவே மாட்டேன். ஒரு தடவை போட்டால் அதை அடுத்த முறை என் நண்பர்கள், குடும்பத்தினரிடம் கொடுத்து விடுவேன் எனவும் தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் சினேகா தன்னுடைய பிரத்யேக புடவை பொட்டிக்கை திறந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top