"பேர் மேட்ச்" சும்மா அள்ளுது…. குட் நியூஸ் சொன்ன சினேகா - பிரசன்னா ஜோடி!
நடிகை சினேகா:
தென்னிந்திய சினிமாவின் சிரிப்பழகி சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
2000 காலகட்டங்களில் தமிழ். தெலுங்கு. மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
2001 ஆம் ஆண்டில் வெளி வந்த என்னவளே திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதை எடுத்து புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஆட்டோகிராப் , பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விஜய்யுடன் கோட் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
14- வது திருமண நாள்:
இதனிடையே நடிகை சினேகா சினேகாலயா என்ற பட்டுப்புடவை கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். தொடர்ச்சியாக திரைப்படங்களிலிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய திருமண நாளை ஓட்டி தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட இதை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடியின் அழகு ரசித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் .
14-வது திருமண நாளை கொண்டாடும் சினேகா - பிரசன்னாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருவதோடு விஜய் திரிஷா என்ன ஜோடி இங்க பாருங்க பேர் மேட்சிங் சும்மா அள்ளுது என கமெண்ட் செய்து வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
