எம்ஜிஆர் என்ன!.. விஜய்யால் விஜயகாந்தாக கூட முடியாது!.. சொல்றது யாருன்னு பாருங்க!..

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசியது சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. நடிகர் விஜய் தனது சுயநலத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றுகிறார் என்றும் கல்வி விருது விழா என்று நடத்தி மாணவர்களே நீங்கள் அடுத்த முதல்வராக வேண்டும் என பேசுவதை கேட்டு ஆனந்த படுகிறார்.

அடுத்த எம்ஜிஆர் ஆக வேண்டும் என விஜய் நினைத்து அரசியலில் இறங்கியுள்ள நிலையில் அவரால் அடுத்த விஜயகாந்த் ஆக கூட ஆக முடியாது என்கிற தொனியில் பாடலாசிரியர் சினேகன் விஜயகாந்த் பற்றி கூறிய ஒரு த்ரோபேக் ஸ்டோரி அமைந்துள்ளது.

ஒருமுறை விஜயகாந்த்தை பார்க்க ஒரு பஸ் முழுவதும் கல்லூரி மாணவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர். முதலில் அவர்கள் ஊர் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் என நினைத்த விஜயகாந்த் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து சாப்பிட்டுப் போங்க என்றார். அப்போது அவருடன் நான் இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அந்த விஜயகாந்த் அந்த மாணவர்களை பார்த்து ஊரெல்லாம் சுத்தி பார்த்து விட்டீர்களா எனக் கேட்க, உங்கள பார்க்க தான் வந்திருக்கிறோம். நீங்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், அதில் இணைவதற்காக வந்திருக்கிறோம் என்றார்.

உடனே விஜயகாந்துக்கு கோபம் வந்துவிட்டது, அடிச்சு பல்ல எல்லாம் பேத்துடுவேன். முதல்ல படிக்கிற வழியை பாருங்க, படித்து முடித்த பிறகுதான் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். படிக்கும்போது இப்படித் தேவையில்லாமல் டைவர்ட் ஆகிடாதீங்க என கண்டித்து அனுப்பினார் விஜயகாந்த் என சினேகன் சிலாகித்து பேசியுள்ளார்.

Related Articles

Next Story