டாக்ஸிக் முதல் பாரடைஸ் வரை!.. ஆகஸ்ட்டில் வரிசை கட்டும் பெரிய படங்கள்.. அப்போ ஜனநாயகன்?..
திரையரங்குகளில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக அமைய உள்ளது. காரணம், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான சூர்யா, யாஷ், துல்கர் சல்மான், ப்ரித்விராஜ், ரவிதேஜா, நிவின் பாலி, நானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிரம்மாண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஷ்வனாந்த் அண்ட் சன்ஸ், யாஷின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய "டாக்ஸிக்" , துல்கர் சல்மான் நடித்துள்ள "ஐ அம் கேம்", ப்ரித்விராஜின் "கலிஃபா: தி ப்ளட்லைன்", நிவின் பாலி நடித்துள்ள "பெத்லேஹம் குடும்ப யூனிட்", ரவிதேஜாவின் "இருமுடி", பாரடைஸ்" உள்ளிட்ட படங்கள் ஆகஸ்ட் மாத பாக்ஸ் ஆபிஸை கைப்பற்ற களமிறங்குகின்றன.
ஒவ்வொரு படத்திற்கும் தனித்துவமான கதைக்களம், பெரிய நட்சத்திர பலம் மற்றும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், இந்த முறை பாக்ஸ் ஆபிஸ் போட்டி வழக்கத்தை விட கடுமையாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக யாஷின் "டாக்ஸிக்" மற்றும் சூர்யாவின் "விஷ்வநாந்த் அண்ட் சன்ஸ்" ஆகிய படங்கள் பான் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், நடிகர் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படமும் இந்த ஆகஸ்ட் வெளியீட்டு பட்டியலில் இணையுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், ஜனநாயகன் ஆகஸ்ட் மாதத்தில் களமிறங்கினால், பாக்ஸ் ஆபிஸ் போட்டி மேலும் உச்சக்கட்டத்தை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரே மாதத்தில் இத்தனை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாத பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் இறுதியில் வெற்றிக்கொடி நாட்டப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும்.
