அப்படி என்னப்பா ஊழல் நடந்தது?- திமுகவை சாடிய எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசியல் களம் தற்பொது சூடுபிடித்துள்ளது. அதிமுக புயல் வெகத்தில் பிரச்சாரத்தில் இடுபட்டு வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி த்ற்போது சூராவளி சுற்றுப் பய்ணத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்சியில் பொதுமக்களிடம் பேசிய அவர்,
திமுக ஒரு ரவுடித்தனம் செய்யும் கட்சி என்பது எல்லாருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி எப்படியாவது இந்த தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெறலாம் என்று வியூகம் வகுத்து வருகிறார்கள். அதற்கு நாம் எவ்விதத்திலும் இடம் தரக் கூடாது. பாராளுமன்ற தேர்தலில் பல திட்டங்களை கூறி வாக்குபெற்று வெற்றி பெற்ற அவ்ர்கள் தற்போது வரை தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லையே
அதிமுக ஆட்சி ஊழலில் ஈடுபட்டதாக இவர்கள் சொல்லுகிறார்கள். அப்படி என்னப்பா ஊழல் நடந்தது? ரத்து செய்த டெண்டர் மேல எப்படி ஊழல் செய்ய முடியும்? என்று திமுகவை வெளுத்து வாங்கியுள்ளார் முதல்வர்.