Categories: Cinema News latest news

அந்த விவகாரத்திற்கே காரணம் சோபிதாதான்… வெளியான வைரல் புகைப்படம்…

Sobhita: ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக இருந்த சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து பெரிய அதிர்ச்சியாக அமைந்த நிலையில் சிலர் அவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சைதன்யாவின் இரண்டாவது திருமண அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் பெண்ணான சமந்தா கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட்டிலும் கொடிக்கட்டி பறந்து வந்தார். தன்னுடைய முதல் பட நாயகனான சைத்தன்யா  காதலிக்க தொடங்கினார். இரண்டு வருடம் காதலித்து வந்தவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்ய இருப்பதாக நிச்சயதார்த்த விழா உடன் அறிவிப்பை வெளியிட்டனர்.

இதையும் படிங்க: ரஜினிக்கு அப்படிப்பட்ட கெட்டபுத்தி கிடையாது… எஸ்.வி.சேகர் சொன்ன சூப்பர் தகவல்

தொடர்ந்து அந்த ஆண்டு இறுதியில் இரு மத முறைப்படி இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.  திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக மாறியது. இதைத் தொடர்ந்து இவர்களை ரசிகர்கள் #Chaysam என கொண்டாடி தீர்த்தனர்.அதன்பிறகு சமந்தாவின் எல்லா பேட்டியுமே சைதன்யா மீது அவர் வைத்திருந்த காதல் அப்பட்டமாக வெளிப்படும்.

இதைத் தொடர்ந்து திடீரென 2021 ஆம் ஆண்டு தங்களுடைய நான்காண்டு திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த முடிவுக்கு காரணம் சமந்தாவின்  நடிப்பு வாழ்க்கை தான். அவர் ஒற்றை பாடலுக்கு ஆடியதும், பாலிவுட் வெப் சீரிஸும் தான் என கிசுகிசுத்தனர்.

அதற்கேற்ப போல, சமந்தா சைதன்யாவின் புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்து இருந்தார். ஆனால் நாக சைதன்யா சமந்தாவை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாவில் ஃபாலோ செய்து இருந்தார். இந்நிலையில் உண்மையிலேயே சோபிதா துலிபாலா தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் இடையில் பிரச்னையை ஏற்படுத்தியது என்ற அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது.

இவர்கள் விவகாரத்து அறிவிப்பு வெளியான நாளில் சமந்தாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவர் இன்ஸ்டாவில் மோசமான பெண் இனிமே அவர் உனக்கு தான் எனக் குறிப்பிட்டுள்ளார். சோபிதாவுடன் சைதன்யாவுக்கு இருந்த தகாத உறவால் தான் சமந்தா திருமண முறிவுக்கு சென்றதாக ரசிகர்கள் தொடர்ச்சியாக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முழு படத்தையும் மீம் டெம்ப்ளேட்டா மாத்திட்டாங்களே! ஓடிடியில் இந்தியன் 2 படத்தை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily