மெகா சீரியல் மாதிரி இருக்கு!.. நூறு சாமி பார்த்துட்டு புலம்பும் ஃபேன்ஸ்...
தமிழ் சினிமாவில் குறைவான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் மனதுக்கு நெருக்கமான படங்களை கொடுப்பவர் இயக்குனர் சசி. இவர் இயக்கிய சொல்லாமலே, பூ, சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் பேசப்பட்டது. விஜய் ஆண்டனியை வைத்து பிச்சைக்காரன் என்கிற மெகா ஹிட் படத்தையும் சசி கொடுத்துள்ளார்.பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அவர் இயக்கியுள்ள நூறு சாமி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிகை சுவாசிகா நடித்திருந்தார். விஜய் ஆண்டனி ஒரு கேமியோ வேடத்தில் மட்டும் நடித்திருந்தார்..
சிறுவயதிலேயே கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள விருப்பப்படும் போது அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் பெண்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. நிறைய பெண்களை அழவும் வைத்திருக்கிறது. மாற்றத்தை விரும்பும் ஆண்களுக்கு இந்த படம் பிடித்திருந்தாலும் சாமானிய ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை.
படம் பார்த்து விட்டு வெளியே வரும் பலரும் ‘சீரியல் போல இருக்கிறது.. படம் முழுக்க அழுது கொண்டே இருக்கிறார்கள்.. படம் இரண்டு மணி நேரம் 10 நிமிஷம் ஓடுகிறது.. அதில் இரண்டு மணி நேரம் அழுது கொண்டே இருக்கிறார்கள்.. விதவை அம்மாவுக்கு திருமணம் செய்து வைக்க மகன்களே சமாதிக்கிறார்கள் என்பதையெல்லாம் ஏற்க முடியவில்லை’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.. மேலும், போஸ்டரில் விஜய் ஆண்டனியை பெரிதாக காட்டி ஏமாற்றிவிட்டார்கள். அவர் 10 நிமிடம் மட்டுமே வருகிறார். ஏமாற்றமாக இருந்தது’ என்கிறார்கள்.
சிலரோ ‘நல்ல கதை.. பெண்களை சாமி என்று சொல்லி ஒதுக்கி வைத்து விடக்கூடாது... அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என காட்டியிருக்கிறார்கள்’ என்று பாராட்டி வருகிறார்கள். இப்படி நூறு சாமி திரைப்படம் கலமையான விமர்சனங்களை பெற்று வருவதால் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்குமா? இல்லையா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.
