ஒரு ஆம்பள அவ்ளோவ் உடைஞ்சு அழுகுறாரு... ஆர்த்திக்கு அட்வைஸ் கொடுத்த சோனா!

 
ravi mohan sona

நடிகை சோனா:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த குசேலன் திரைப்படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை தான் சோனா. இவர் காமெடி ரோல்களிலும் கவர்ச்சி ரோல்களிலும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

sona

சமீபத்தில் அவர் நேர்காணலில் பேசிய வீடியோ இணையத்தில் பெரும்பளவில் வைரலாகி வைரல் ஆகியது. குறிப்பாக விக்னேஷ் சிவன் குறித்து அவர் பேசிய விஷயம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்ததாக  நடிகர் ரவி மோகன் குறித்தும் அவரது விவாகரத்து குறித்தும் பேசி இருக்கிறார் சோனா .

ஆம்பள உடைஞ்சு அழுகுறாரு: 

ஒரு ஆம்பள அவ்ளோ பெரிய பிரஸ்மீட் வச்சு எல்லாரையும் கூப்பிட்டு கத்தி அழுது உடைந்து கதறி அழுவுறான்னா அது அவ்ளோ பெரிய ஈஸியான விஷயம் கிடையாது. அவர் மனசு முழுக்க எவ்வளவு வலி இருந்திருக்கும்?  எப்பவும் ஒருத்தரை அடிமையா வச்சிருக்கணும்னு நினைக்காதீங்க. 

நமக்கானவர்களை அப்படி ட்ரீட் பண்ணவே கூடாது. நம்ம எந்த அளவுக்கு அன்பு ஒருத்தருக்கு காட்டுறோமோ அதை விட அதிகமா அவங்க அன்பா இருப்பாங்க. அன்பு கொடுத்து பாருங்க நம்ம அவங்களை அடிமையாக்க வேண்டாம். அவங்களே நமக்கு அடிமையாகிடுவாங்க.

ravi mohan

சோனா அட்வைஸ்: 

அன்பு, பாசம் இது எதுவுமே இல்லாம ஒரு மனுஷன் எப்படி ஒரு வாழ்க்கையை வாழ முடியும் அதுதான் நடிகர் ஜெயம் ரவி வாழ்க்கையில் இப்பொழுது நடந்து இருக்கு என்று ரவி மோகனின் மனைவி ஆர்த்திக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் சோனா பேசியிருக்கிறார் அவரின் இந்த கருத்து ஒட்டுமொத்த ஆண் சம் சமூகமும் ஆதரித்து வருகிறது

Tags

From Around the web