×

சோனியா அகர்வாலுக்கு மறுமணம் - தேதியுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னாடி நடிகையாக பேசப்பட்டவர் சோனியா அகர்வால்.இவர்  7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, கோவில், புதுப்பேட்டை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

 

சோனியா அகர்வால் தன்னை 7G ரெயின்போ காலனி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் தனக்கு இன்னும் 3 நாட்களில் திருமணம் நடைபெற்ற இருப்பதை குறிக்கும் வகையில் ஒரு வீடியோ மற்றும் புகைப்படம் ஆகியவற்றை சோனியா அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News