×

சோனு சூட்டிற்கு சிறந்த  மனிதநேய செயற்பாட்டாளர் விருது - ஐ.நா. சபை கவுரவம்

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு கடந்த சில மாதங்களாக தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறார் நடிகர் சோனு சூட். 

கொரோனா லாக்டவுன் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்த போது அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தவர் நடிகர் சோனு சூட். இதையடுத்து அதுபோல தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இதனால் சமூகவலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பலரும் அவரிடம் உதவிக்கரம் கேட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர். அவரும் தன்னால் முடிந்தவரையில் பலருக்கும் உதவி வருகிறார்.

இந்நிலையில், ஐ.நா.சபை அவருக்கு சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பல துறைகளை சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News