Categories: Cinema News latest news

இந்த ஒரு சீன் மட்டும் இருந்திருந்தால் சூர்யாவுக்கு தேசிய விருது கோவிந்தா தான்…

2020 ஆம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படம் வெளியாகி பலத்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. சூர்யாவின் நடிப்பு படத்தின் கதைக்கலாம் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தில் கண்டிப்பாக விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்த்தது போலவே, இப்படத்திற்கு தேசிய விருது குவிந்தது. மொத்தமாக சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இசை என ஐந்து தேசிய விருதுகளை தட்டி சென்றது.

இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அது சூரரைப் போற்று ஹிந்தி  டப்பிங் பாதிப்பு. அதில் ஓரிடத்தில் சண்டைக் காட்சி வருகிறது. அதில் சூர்யா ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகிறார்.

இதையும் படியுங்களேன் – தனுஷுக்கும் ‘நோ’.! சிவகார்த்திகேயனுக்கும் ‘நோ’.! அடம்பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி.! இதுதான் காரணமாம்…

ஆனால், தமிழ் பதிப்பில் அது இல்லை. தேசிய விருதுக்கு அனுப்பிய பதிவிலும் அது இல்லை. அந்த சண்டைக்காட்சி சற்று கதை ஓட்டத்திற்கு நெருடலாக இருக்கிறது என இயக்குனர் யோசித்து, அதனை நீக்கி விட்டார். நீக்கிய பிறகுதான் படத்தின் கதை களம் மிகவும் நெருக்கமாக எதார்த்தமாக இருந்தது என்று கூறலாம். அதன் காரணமாகத்தான் நிச்சயம் இந்த படத்திற்கு இத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan