சூரி - சுஹாஸ் இணைந்து நடனமாடியிருக்கும் 'மண்டாடி' படத்தின் ப்ரோமோ பாடல் வெளியீடு!
நடிகர் சூரி ஹீரோவாகவும், தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் நடித்திருக்கும் புது படம் தான் 'மண்டாடி'. இதை மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கிறார்.
இதில் சத்யராஜ், மஹிமா நம்பியார், பால சரவணன், ரவீந்திரா விஜய் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
Before the sea roars, hear its rhythm 🌊❤️🔥#MandaadiMandaadi Promo Song out now 🔥🥁https://t.co/0uXnT1mqVa - TAMILhttps://t.co/bG9vfUnHFb - TELUGU#Mandaadi in theatres from September 10 ⚓🎬@sooriofficial #Suhas @elredkumar@rsinfotainment @MathiMaaran @gvprakash… pic.twitter.com/rt4KyjxLb9
— Actor Soori (@sooriofficial) July 18, 2026
இந்நிலையில், இன்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் 'மண்டாடி மண்டாடி' என்ற ப்ரோமோ பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடலில் சூரியும், சுஹாஸும் இணைந்து நடனமாடி அசத்தியிருக்கிறார்கள்.
