சூரியின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா? இனிமே பைபாஸ்தான்.. எங்கேயும் நிக்காது
பரோட்டா சூரி: பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தவர் சூரி. அதிலும் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் தான் அவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது. அதில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அந்த பெயருடனேயே சில காலம் தமிழ் சினிமாவில் வலம் வந்தார் சூரி. அதன் பிறகு நகைச்சுவை நடிகர்களில் ஒரு முன்னணி நடிகராக மாறிய பிறகு டாப் ஹீரோக்களுக்கு இணையாக சூரியும் பேசப்பட்டார்.
கதையின் நாயகன்: விஜய் அஜித் கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். இப்படியே பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் பின்னி பிடல் எடுத்து வந்த சூரி விடுதலை படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார். அதுவும் வெற்றிமாறன் சூரிக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை வெளிக்கொண்டு வந்த படம்தான் விடுதலை படம்.
தொடர்ந்து நல்ல படங்கள்: அதில் ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதற்கு முன்பு நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர்கள் ஏராளமான பேர். ஆனால் தொடர்ந்து அவர்கள் ஹீரோவாக மக்கள் மத்தியில் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் சூரியை பொறுத்த வரைக்கும் விடுதலை படத்திற்கு பிறகு கொட்டுக்காளி, கருடன் என அடுத்தடுத்து மக்கள் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல இயக்குனர்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார் சூரி. இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சூரியின் அடுத்த படத்தை செல்ஃபி பட இயக்குனர் மதி இயக்கப் போவதாக பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஏற்கனவே செல்ஃபி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்ற திரைப்படம். அந்த இயக்குனரின் இயக்கத்தில் தான் சூரி அடுத்ததாக நடிக்கப் போகிறார் என ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே தமிழில் நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சம் இருப்பதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியாகி சந்தானத்தின் காமெடி பெருமளவு பேசப்பட்டு வருகிறது. ஆனால் சந்தானம் இப்போது ஹீரோவாக இருப்பதால் சந்தானத்தின் காமெடியை மிகவும் மிஸ் பண்றேன் என சுந்தர் சி கூறியிருந்தார். அதை போல சூரியின் காமெடியும் மக்களால் ரசிக்கப்பட்டது. இப்போது அவரும் ஹீரோவாக மாறிவிட்டார்.