பொண்டாட்டிக்கு பிறகுதான் சாமியே! – சூரி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வளர்ந்து
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் நடிகர் சூரி. துவக்கத்தில் பல படங்களில் துணை பாத்திரங்களில் நடித்து வந்தவர் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் முதன்மை நகைச்சுவை வேடத்தில் நடித்தார். தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், தேச்சிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து நகைச்சுவை நடிகராக மட்டுமே பயணிக்காமல், கதையின் நாயகனாகவும் களமிறங்கிய சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை ரசிகர்களுக்கு காட்டினார். இப்படத்தின் வெற்றி சூரியின் திரைப்பயணத்தையே மாற்றி அமைத்தது.
அதன்பிறகு விடுதலை 2, கருடன், மாமன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார். குறிப்பாக கிராமத்து பின்னணி மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் சூரியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தற்போது கதாநாயகனாக பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சூரி, பெண்களின் முக்கியத்துவம் குறித்து பேசிய கருத்து தற்போது அனைவரின் கவனம் பெற்றுள்ளது.
அதில் பேசிய சூரி, பெண்கள் இல்லாமல் வாழ்வில் எந்தவொரு வெற்றியும் முழுமை அடைந்தது கிடையாது. அம்மாவாக இருக்கலாம், மகளாக இருக்கலாம், சகோதரியாக இருக்கலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. சாமிக்கு அப்புறம் பொண்டாட்டி என்பார்கள். ஆனால் பொண்டாட்டிக்கு பிறகுதான் சாமி என்று கூறினார்.
சூரியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகிறது. பெண்களின் பங்களிப்பு மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் வகையில் சூரி பேசிய இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது.