Categories: Cinema News latest news

இது வேற லெவல் ப்ரோமோஷன்! புது ரூட்டில் சூரி.. என்னெல்லாம் பண்றாரு பாருங்க

Actor Soori:  விடுதலை, கருடன் ஆகிய படங்களை தொடர்ந்து சூரி அடுத்ததாக ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. இந்தப் படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார். சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தை ஈர்த்த கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய வினோத்ராஜ் தான் கொட்டுக்காளி திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.

சமீபகாலமாக மக்கள் மத்தியில் சிறந்த நடிகர் என்ற பேரை பெற்ற சூரியின் நடிப்பில் அடுத்து வெளியாகும் திரைப்படம்தான் கொட்டுக்காளி. இந்தப் படத்தில் சூரியுடன் மலையாள நடிகையான அன்னபென் லீடு ரோலில் நடித்திருக்கிறார். அன்னபென்னின் கெட்டப்தான் இந்தப் படத்தில் பெருமளவும் பேசப்பட்டது.

இதையும் படிங்க: 2வது நாளில் 2 மடங்கு வசூல்!.. பாக்ஸ் ஆபிசில் இறங்கி அடிக்கும் அந்தகன்!….

பல பேட்டிகளில் சூரி அன்னபென்னின் கெட்டப்பை பெருமையாக பேசி வருகிறார். இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படத்தை பற்றியும் படத்தில் நடித்ததை பற்றி சூரி சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது பாகுபாலி படம் என்றால் ஒரு மைண்ட் செட்டில் வருகிறீர்கள். விக்ரம், பொன்னியின் செல்வன் படம் என்றால் ஒரு மைண்ட் செட்டில் வருகிறீர்கள் இல்லையா? அதை போல் கொட்டுக்காளி படத்திற்கும் ஒரு மைண்ட் செட்டில் வரவேண்டும்.

kottu

இதையும் படிங்க: தக் லைப் முடிச்சதும் சிம்பு செய்யப்போகும் வேலை!.. அடுத்த ரஜினி ஆகாம இருந்தா சரி!..

ஆனால் கருடன், விடுதலை படங்கள் மாதிரியான மைண்ட் செட்டில் வராதீர்கள். பல ஊர்களுக்கு சென்று பல விருதுகளை தட்டிச்சென்ற படம் . ஒரு வாழ்வியலான திரைப்படம். படம் பார்க்கும் போது 15 நிமிடத்திற்கு பிறகுதான் உங்களை அந்தப் படத்திற்குள் அழைத்துச்செல்லும். அப்படி ஒரு மைண்ட் செட்டில் வாருங்கள்.

ஒரு படத்தை வைத்து இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற மைண்ட் செட்டில் மட்டும் வராதீர்கள்.ஆனால் கண்டிப்பாக படம் அற்புதமாக இருக்கிறது என சூரி அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: நாக சைதன்யா இல்லைனா என்ன? நான் இருக்கேன்.. புரபோஸ் செய்த ரசிகருக்கு சமந்தா கொடுத்த ரிப்ளே

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini