×

அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டார்!.... அண்ணாத்த அனுபவம் பேசும் சூரி......

 
soori

பரோட்டோ காமெடி மூலம் பிரபலமான நடிகர் சூரி ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:

ரஜினி சாருடன் நடிக்கிறோம் என்றதுமே எனக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஹோட்டலில் எனக்கு அடுத்த அறையில் அவரின் அறை. சந்தோஷத்தில் பறக்க துவங்கினேன். ஒரு ரசிகனாக அவரை சந்திக்க காத்திருந்தேன். அவரை பார்த்தபோது ‘இது கனவா’ என கிள்ளிக் கொண்டேன்.

soori

‘ஹாய் சூரி எப்படி இருக்கீங்க’? என அன்போடு கேட்டார். சிவகார்த்திகேயனோடு உங்க கெமிஸ்ட்ரி சூப்பர்’ என சொல்லி அந்த படங்களை நினைவுபடுத்தினார். படப்பிடிப்பில் நான் தயங்கி நின்றாலும் என்னை அழைத்து அருகில் அமரவைத்து பேசி என் கூச்சம் போக்கினார். சூப்பர்ஸ்டார் என்கிற அனுபவமெல்லாம் அவருடன் பழகிய விதத்தில் போய்விடுகிறது. மிகவும் எளிமையாக பழகுகிறார். அதனால்தான் உச்சத்தில் இருக்கிறார்.

rajini

படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும்போது விமானத்தில் அவரின் இருக்கைக்கு அருகில் நான். அவர்தான் அப்படி சீட் போட சொல்லி இருந்தாராம். அதைக் கேள்விப்பட்டு விமானத்தின் மேலே பறந்து வந்தேன். எனைப் பார்த்து ‘நான் உங்களுக்கு கம்பர்டிபிளாக இருந்தேனா?’ என கேட்க நான் அசந்து போனேன். சினிமாவுக்கு வந்த பலனையே அடைந்துவிட்டேன். கடவுளை பார்த்தது போல் இருக்கிறது என அவரிடம் கூறினேன். எனக்கு வாழ்த்து சொன்னார்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News