Connect with us

Cinema News

சிவகார்த்திகேயனை முந்திய சூரி!.. வெற்றிமாறன் படத்தையே இறக்க போறாரு.. அமரன் என்னதான் ஆச்சோ?..

இந்த மே மாதம் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டு 50 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் கவின் அடித்துள்ள ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டார் திரைப்படமும் ஓரளவு வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது. இந்நிலையில், அதற்கு அடுத்த வாரம் தனது படத்தை வெளியிடும் முடிவில் நடிகர் சூரி தற்போது கர்ச்சீப்பை போட்டு வைத்துள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜா பயோபிக்கில் ஏஆர் ரஹ்மானா? சான்சே இல்ல.. அதற்கான காரணத்தை கூறிய பிரபலம்

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் கதை என்ன ஆனது என்றுதான் தெரியவில்லை.

கமல்ஹாசன் படத்தில் சிம்பு நடித்து வரும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு நடிக்கக்கூடாது என அவருக்கு ஹெலிகாப்டர் கொடுத்து, டாக்டர் பட்டம் கொடுத்து அழகு பார்த்த ஐசரி கணேஷ் புகார் அளித்துள்ள நிலையில், கமல்ஹாசனுக்கு ரெட்கார்டு கொடுக்க வேண்டுமென திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: பிரசாந்தின் இன்னொரு முகம் தெரியுமா? இந்திய சினிமாவிலேயே இவர்தான் ஃபர்ஸ்டாம்.. என்ன மேட்டரு பாருங்க

இந்நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் இப்போதைக்கு வெளியாகும் சூழல் இல்லை என்றே கூறப்படுகிறது. மே மாதத்தின் இறுதி வாரங்களில் எந்த ஒரு பெரிய படங்களும் இல்லாத நிலையில், வெற்றிமாறன் தயாரிப்பில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடித்துள்ள கருடன் திரைப்படத்தை மே மாதம் இறுதிக்குள் வெளியிடப் போவதாக சூரி தற்போது அறிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு திரைக்கதையை வெற்றிமாறன் எழுதியுள்ள நிலையில் படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை 2 மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள கொட்டுக்காளி என வரிசையாக சூரி படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

இதையும் படிங்க: முதல் படம் செம பல்ப் வாங்குச்சு… அடுத்த வாய்ப்புக்காக 27 வருடம்… சீக்ரெட் சொல்லும் ஜோதிகா…

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top