×

தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு!... இத்தனை கோடியா! சூரி புகார்...

நடிகர் சூரி தற்போது அடையார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார். அதாவது நிலம் வாங்கி தருவதாக தன்னிடம் 2.70 கோடி மோசடி செய்ததாக தயாரிப்பாளர் உட்பட மூன்று பேர் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 

தமிழில் மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, ஜில்லா, வேதாளம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல ஹிட் படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் சூரி.

1997 ஆம் ஆண்டு காதலுக்கு மரியாதை படத்தில் சிறிய ரோலில் அறிமுகமானவர் தனது கடின உழைப்பினால் இன்று முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்திருக்கிறார். 

இந்நிலையில் 2.70 கோடி ஏமாற்றியதாக தயாரிப்பாளர் உட்பட மூன்று பேர் மீது அதிரடி வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் திரையுலகில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு காவல் நிலையத்தில்  எழுப்பப்பட்ட புகாரை அடுத்து விசாரணை துவங்கியுள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News