மன்னிக்கவும்... நான் கட்சி துவங்க போவதில்லை - ரஜினி அறிக்கை...

வருகிற 31ம் தேதி அரசியல் கட்சி பற்றி அறிவிப்பதாகவும், ஜனவரியில் கட்சி துவங்குவதாகவும் நடிகர் ரஜினி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், அண்ணாத்தே படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். 3 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் 3 நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.
இந்நிலையில், தான் அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என தற்போது அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டவன் கொடுத்த எச்சரிக்கை. கட்சி துவங்கி சமூக வலைத்தளங்களில் மட்டும் பரப்புரை செய்தால் நான் நினைக்கும் மாற்றத்தை தர முடியாது. எனவே, அரசியல் கட்சி துவங்கும் முடிவை கை விடுகிறேன். மருத்துவ ரீதியாக என் ரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது. என் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும். ஆனால், என்னை புரிந்து கொள்ளுங்கள். என்னை மன்னித்து விடுங்கள்’ என அதில் கூறியுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) December 29, 2020