Connect with us
soundarya

Cinema News

தந்தையின் மகள்களாக மாறினோம்!.. டிவிட்டரில் டிபியை மாற்றிய ரஜினி மகள்….

ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யா 18 வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவோ, இருவரும் பிரிய முடிவெடுத்திருப்பதாகவோ இதற்கு முன் எந்த செய்தியும் வெளியாகவில்லை.

danush

ஆனால், திடீரெனெ நேற்று இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர். இனிமேல் அவரவர் பாதைகளில் செல்வது என முடிவெடுத்துள்ளதாகவும், இது தங்களின் தனிப்பட்ட முடிவு என்பதால் தங்களின் உணர்வுகளை மதிக்குமாறும் இருவரும் வேண்டுக்கோள் வைத்துள்ளனர்.

dp

இந்நிலையில், ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்தின் டிபியை மாற்றியுள்ளார். சிறு வயதில் அவரும் ,ஐஸ்வர்யாவும் ரஜினியை கட்டி அணைத்திருக்கும் புகைப்படம் இது. ஏற்கனவே, சௌந்தர்யா ஒரு மகன் இருந்த நிலையில் கணவரை பிரிந்து வந்தார். அ

தன்பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது ஐஸ்வர்யாவும் கணவரை பிரிந்துள்ள நிலையில், இருவரும் தந்தையிடம் தஞ்சம் அடைந்துவிட்டோம் என மறைமுக கூறுவது போல் இருக்கிறது அந்த புகைப்படம்…

rajini

இதைத்தொடர்ந்து ‘அப்பா என்னும் கோட்டைக்குள் இளவரசிகள் எப்போதும் இளவரசிகளே… “மகள்கள்” நடுவில் இருக்கும் குழந்தையை நல்லா பார்த்துக்கொள்ளவும்’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்..

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top